1—Never believe that you are ill—reject the fear from your mind and body.
2—When frightening suggestions and feelings come to upset you, do not listen to them and remain quiet and confident in the Divine’s protection.
3—Call for the light, the force and the strength from Sri Aurobindo and myself, wrap yourself in them and push them inside your body as the true means for cure.
The Mother
ஒரு வீடு இருக்கிறது. அவ்வீட்டில் இனிமை, ஒளி,சாந்தி ஆகியவை இருக்கின்றன. ஆனால் அவை பொய்மையினால் சூழப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நீ அந்த வீட்டை விட்டு வெளியேறி, அதன் கதவை மூடிவிட்டால், நீ மோசமான அதிர்வுகளின் இடையே பாதுகாப்பற்று இருப்பதை உணர்வாய், அவை உனது இதயத்துள் புகுந்து அனைத்தையும் நிலைகுலையச் செய்யும்.
கீழ் சக்திகளின் அதிர்வுகள் பல வகையானவை;
இத்தீய சக்திகளிலிருந்து நீ விடுபட்டு, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், நீ உடனடியாக பின்னோக்கி சென்று, உன் வீட்டினுள், அதாவது இதயத்திற்குள் சென்று விடவேண்டும். அப்போது எவருமே உன்னுடைய, உண்மையான ஜீவனை தொடவோ, அதற்குத் தொல்லைகள் தரவோ முடியாது.
நீ அங்கு சென்றவுடன், அமைதியாக இருந்து "இறைவனை" அழை. அப்போது இறைவனுடைய பேரன்பு மற்றும் இனிமையின் உணர்வுகளை நீ பெறுவாய். பகவான் தன்னுடைய திருக்கரங்களில் உன்னைத் தாங்கிக் கொண்டிருப்பதை நீ முற்றிலும் உணர்ந்து கொள்வாய். இவ்வாறாக உன்னுடைய வாழ்வின் மிக இனிமையான அருமையான தருணங்களை நீ பெறுவாய்.
இதை நீ தொடர்ந்து செய்து கொண்டே வருவாயென்றால் , எவ்வித தீயசக்திகளைப் பற்றி நீ கவலைக் கொள்ளத் தேவையில்லை. அதிக காலம் பிடிக்கும் ஒருமுனைப்படுதல் இங்கு தேவையில்லை. இது ஒரு சிறந்த பரிசோதனை ---. இது மூளையின் வேலையுமல்ல. இது அறிவுபூர்வமானதும் அல்ல.
நீ உன் இதயத்தினுள் சென்றால், அங்கு அனைத்தையும் பெறலாம், ஏனெனில் அனைத்தும் அங்கு உள்ளன.
நீ தனிமையாக இருப்பது போல் உணரமாட்டாய்; இறைவனுடைய சாந்நித்யத்தை நீ இடையறாது உணர்வாய்.
வீணான தாழ்ந்த எண்ணங்கள், உன்னிடம் இல்லையெனில், நீ இறைவனின் பேரொளியையும் சாந்நித்யத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்வாய். பேருண்மையை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் முதலில் சாந்தியும், பின் ஒளியும் இறுதியில் பலமும் உன்னை வந்தடையும்.
சாந்தியில்தான் நீ அனைத்தையும் உணர முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்.
🕉️ஸ்ரீ அன்னை.
