Thursday, April 23, 2026

RULES TO COPE WITH ILLNESS - Mother !

 1—Never believe that you are ill—reject the fear from your mind and body.

2—When frightening suggestions and feelings come to upset you, do not listen to them and remain quiet and confident in the Divine’s protection.

3—Call for the light, the force and the strength from Sri Aurobindo and myself, wrap yourself in them and push them inside your body as the true means for cure.

The Mother


ஒரு வீடு இருக்கிறது.  அவ்வீட்டில் இனிமை, ஒளி,சாந்தி ஆகியவை இருக்கின்றன.  ஆனால் அவை பொய்மையினால் சூழப்பட்டிருக்கின்றன.  இப்பொழுது நீ அந்த வீட்டை விட்டு வெளியேறி, அதன் கதவை மூடிவிட்டால், நீ மோசமான அதிர்வுகளின் இடையே பாதுகாப்பற்று இருப்பதை உணர்வாய், அவை உனது இதயத்துள் புகுந்து அனைத்தையும் நிலைகுலையச் செய்யும்.     

கீழ் சக்திகளின் அதிர்வுகள் பல வகையானவை;

இத்தீய சக்திகளிலிருந்து நீ விடுபட்டு, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், நீ உடனடியாக பின்னோக்கி சென்று, உன் வீட்டினுள், அதாவது இதயத்திற்குள் சென்று விடவேண்டும்.  அப்போது எவருமே உன்னுடைய, உண்மையான ஜீவனை தொடவோ, அதற்குத் தொல்லைகள் தரவோ முடியாது.  

நீ அங்கு சென்றவுடன், அமைதியாக இருந்து   "இறைவனை" அழை.   அப்போது இறைவனுடைய பேரன்பு மற்றும் இனிமையின் உணர்வுகளை நீ பெறுவாய். பகவான் தன்னுடைய திருக்கரங்களில் உன்னைத் தாங்கிக் கொண்டிருப்பதை நீ முற்றிலும் உணர்ந்து கொள்வாய்.  இவ்வாறாக உன்னுடைய வாழ்வின் மிக இனிமையான அருமையான தருணங்களை நீ பெறுவாய்.  

இதை நீ தொடர்ந்து செய்து கொண்டே வருவாயென்றால் , எவ்வித தீயசக்திகளைப் பற்றி நீ கவலைக் கொள்ளத் தேவையில்லை. அதிக காலம் பிடிக்கும் ஒருமுனைப்படுதல் இங்கு தேவையில்லை. இது ஒரு சிறந்த பரிசோதனை  ---. இது மூளையின் வேலையுமல்ல. இது அறிவுபூர்வமானதும் அல்ல. 

நீ உன் இதயத்தினுள் சென்றால், அங்கு அனைத்தையும் பெறலாம், ஏனெனில் அனைத்தும் அங்கு உள்ளன.

நீ தனிமையாக இருப்பது போல் உணரமாட்டாய்;   இறைவனுடைய சாந்நித்யத்தை நீ இடையறாது உணர்வாய்.         

வீணான தாழ்ந்த எண்ணங்கள், உன்னிடம் இல்லையெனில், நீ இறைவனின் பேரொளியையும் சாந்நித்யத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்வாய்.   பேருண்மையை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.  ஆனால் முதலில் சாந்தியும், பின் ஒளியும் இறுதியில் பலமும் உன்னை வந்தடையும்.  

சாந்தியில்தான் நீ அனைத்தையும் உணர முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்.

🕉️ஸ்ரீ அன்னை.

Quotes from Mother

 Happiest who stand on faith as on a rock-Sri Annai

நம்பிக்கையை ஒரு பாறையின் மீது நிற்பது போல் உறுதியாகப் பற்றிக்கொள்பவர்களே மிகவும் மகிழ்ச்சியானவர்கள். - ஸ்ரீ அன்னை

***********************************************************************************

Our tasks are given, we are but instruments; nothing is all our own that we create...-Sri Aurobindo

நமது பணிகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன, நாம் வெறும் கருவிகளே; நாம் உருவாக்கும் எதுவும் முழுமையாக நம்முடையதல்ல... - ஸ்ரீ அரவிந்தர்

***********************************************************************************

Do not try to be among the pure. Accept to be with those who are in darkness and give it all with total love-Sri Annai

தூயவர்களோடு இருக்க முயற்சிக்காதே. இருளில் இருப்பவர்களுடன் இருப்பதை ஏற்றுக்கொண்டு, அனைத்தையும் முழு அன்புடன் அர்ப்பணி. - ஸ்ரீ அன்னை

*************************************************************************************


Saturday, April 11, 2026

Friday, April 3, 2026

Quotes from Mother

 Cease not from knowledge, let thy toil be vast...-Sri Aurobindo

அறிவை விட்டு ஓயாதே, உன் உழைப்பு மகத்தானதாக இருக்கட்டும்... - ஸ்ரீ அரவிந்தர்


ஒரு மனிதனை மகிழ்ச்சியடையச் செய்வது பணம் அல்ல, மாறாக அவனுள் இருக்கும் ஆற்றல் சமநிலை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்ல உணர்வுகளே ஆகும் - ஸ்ரீ அன்னை

...it is not money that makes a man happy, but rather an inner balance of energy, good health and good feelings-Sri Annai

*****************************************************************************

The only hope for the future is in a change of man's consciousness and the change is bound to come-Sri Annai

எதிர்காலத்திற்கான ஒரே நம்பிக்கை மனிதனின் உணர்வில் ஏற்படும் மாற்றத்தில்தான் உள்ளது, அந்த மாற்றம் நிச்சயம் வரும் - ஸ்ரீ அன்னை

******************************************************************************

There is no greater bliss than that of being like a

 new- born child in front of the Divine-Sri Annai

தெய்வீகத்தின் முன் ஒரு பச்சிளம் குழந்தையைப் போல் இருப்பதை விடப் பெரிய பேரின்பம் வேறில்லை-ஸ்ரீ அன்னை

********************************************************************************
















Wednesday, April 1, 2026

Quotes from Mother

 In fact, I insist that the more difficult things are, the more you must remain quiet, and the more should you have an unshakable faith. Of all things this is the most important-Sri Annai

உண்மையில், காரியங்கள் எவ்வளவு கடினமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன். எல்லாவற்றிலும் இதுவே மிக முக்கியமானது - ஸ்ரீ அன்னை

***********************************************************************************

The flame of the aspiration must be so straight and so ardent that no obstacle can dissolve it-Sri Annai

பேரவா எனும் சுடர், எந்தத் தடையுமின்றி அணையாத அளவுக்கு நேராகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் - ஸ்ரீ அன்னை

**********************************************************************************

Let not Thy virtues be such as men praise or reward, but such as make for The perfection and God in the nature demands of Thee-Sri Aurobindo

உமது நற்பண்புகள், மனிதர்கள் புகழ்ந்து பாராட்டுபவையாகவோ அல்லது வெகுமானமளிப்பவையாகவோ இருக்காதிருக்கட்டும்; மாறாக, இயற்கையில் உள்ள பரிபூரணமும் இறைவனும் உம்மிடம் கோரும் நிலையை உருவாக்குபவையாக இருக்கட்டும் - ஸ்ரீ அரவிந்தர்

********************************************************************************